TNPSC Thervupettagam

உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடு – 2020 

April 24 , 2020 1584 days 546 0
  • இது “ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்” அல்லது எல்லைகளைக் கடந்த பத்திரிக்கையாளர்கள் (Reporters Without Borders) என்ற அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது பாரீசைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும்.
  • இந்தக் குறியீட்டில் ஏறத்தாழ 180 நாடுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் நார்வே தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்திலும் பின்லாந்து 2வது இடத்திலும் டென்மார்க் 3வது இடத்திலும் உள்ளன.
  • இந்தியா 2018 ஆம் ஆண்டிலிருந்த இடத்திலிருந்து (140) 2 இடங்கள் பின்தங்கி 142வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • 2018 (6 கொலைகள்) ஆம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் எந்தவொருப் பத்திரிக்கையாளரும் கொலை செய்யப்படவில்லை என்று இது கூறுகின்றது.
  • சீனா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் கொரானா வைரஸ் பாதிப்பின் செய்திகள் மீதான தணிக்கை முறைக்காக விமர்சிக்கப்படுகின்றன. 
  • இந்தக் குறியீட்டின் படி, உலகின் மற்ற இதர பிராந்தியங்களைக் காட்டிலும் தெற்கு ஆசியா குறைந்த திறன் கொண்டதாக உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் வடகொரியா 180வது இடத்திலும் சீனா 177வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்